திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே பல உயிரிழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன. இந்நிலையில் தற்போது மற்றுமோர் நடிகரும் மரணமடைந்துள்ளார்.
அதாவது தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ். காமெடி நடிகரான இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். முதன்முதலாக சிருஜல்லு என்ற படத்தில் நடிக்க தொடங்கிய அவர் பின்னர், மதுரா வைன்ஸ், வீதி, டோலு பொம்மலதா மற்றும் நெப்போலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
மேலும் கடைசியாக அவரது நடிப்பில் அனுகோனி பிரயாணம் என்ற படம் வெளிவந்தது. 52வயதான இவர் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்து ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலரும் வேதனை அடைந்துள்ளனர். அவரது மறைவைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!