• Sep 21 2024

இனியா சீரியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள பிரபல காமெடி நடிகை- அதுவும் என்ன காரெக்டரில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியின் முக்கியமான தொடர்களில் கயல் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது இனியா தொடர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.ஆல்யா மானசா தற்போது சன் டிவியின் இனியா தொடரில் லீட் கேரக்டரில் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில், இந்தத் தொடரில் விக்ரமை திருமணம் செய்யும் இனியா, அவரது அன்பை பெறுவதற்காக சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் விக்ரமோ, இனியாவிற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் மார்க் போட்டு அவரது மார்க்குகள் தொடர்ந்து அதிகமாகும் வகையில் செய்கிறார்.


 இந்நிலையில், விக்ரமின் அப்பா நல்ல சிவம், பெண்களை அடிமைத்தனம் செய்ய வேண்டும் என்ற கருத்துள்ளவர் என்பதால், இனியாவிற்கும் அவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த சீரியலில் போலீஸாக நடிக்க நடிகை மதுமிதா கமிட்டாகியுள்ளாராம். இதனால் மதுமிதாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement