• Nov 10 2024

கோப்ராவின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ஒரு படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் ஆவார். எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவர். இவரது நடிப்பில் சியான் 60 என்னும் கோப்ரா திரைப்படம் உருவாகி வருகின்றது

அந்தவகையில் ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் எஸ்.எஸ் லலித் குமாரின் செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகிவருகின்றது.இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார்.. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்போது படத்துக்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை யுனைடெட் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement