• Sep 20 2024

SK 20 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்- சூப்பர் நியூஸ் ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் டான். இப்படத்தில் ப்ரியங்கா மோகன், எஸ். ஜே சூர்யா ,ஷிவாங்கி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது தன்னுடைய 20 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருவதோடு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றது.

படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் லுக் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தற்போது அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement