• Sep 20 2024

திருமலைக்கு வரவுள்ள பிரபல ஜோடி! கொண்டாட ரெடியாகும் இலங்கையர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் சினிமா நட்சத்திரங்களுக்கு  இருக்கும் அதே வரவேற்பு ஆல்யா மானசா- சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் பெரிதுமுள்ளது. அதுமட்டுமின்றி சமூக வலைதளத்தில் துறுதுறுவென அக்டிவாக இருக்கும் இவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமும் உள்ளது.

ஒரு காலகட்டத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான  சீரியலின் TRP ரேட் எகிற ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடியின் நடிப்பு திறமையும் காரணமாக  அமைந்திருந்தது.

எனினும், ஆல்யா மானசா திருமணம், குழந்தை பிறப்பு என சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து இருந்த நிலையில், மீண்டும் இந்த ஜோடி சமூக வலைதளம், நடிப்பு என தமது  வேலையை பிஸியாக தொடர்கின்றனர்.


இந்த நிலையில், தற்போது ஆல்யா மானசா- சஞ்சீவ் ஜோடி இலங்கைக்கு வரவுள்ளதாக தமது இலங்கை வாழ் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியொன்றை கொடுத்துள்ளனர்.

அதன்படி, Helena Beauty Salon & Academy நடாத்தவுள்ள Grand Bridal Talent Show and Awarding Ceremony - 2023  விழாவானது நவம்பர் 25ம் திகதி  திருகோணமலையில் அமைந்துள்ள  இந்து கலாச்சார மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் இவர்களது வருகை அமையவுள்ளது.

குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் காணொளியாக பதிவிட்ட ஆல்யா  - சஞ்சீவ் ஜோடி, 'எங்களோட சேர்ந்து நீங்க நல்லா ஜாலி பண்ணலாம். அதுமட்டும் இல்ல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உங்க டைம்ம ஸ்பென்ட் பண்ணலாம். எல்லாத்துக்கும் ரெடியா இருங்க' என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.


 

Advertisement

Advertisement