• Nov 17 2024

கமலின் மொக்கை வாங்கிய படத்தை பேர்ட்மேன் படத்துக்கு ஒப்பிட்ட பிரபல இயக்குநர்..! விளாசி தள்ளும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

70, 80களில் கலக்கிக் கொண்டிருந்த முன்னணி இயக்குநரான பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் ராம். அதன் பிறகு இவர் 2007ல் கற்றது தமிழ் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை அடுத்தடுத்து கொடுத்தவர்.

இந்தப் படங்களுக்கெல்லாம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்தது. இயக்குநர் ராம் பொது மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார். இதனால் அவை சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.அப்படி தான் இப்போது மொக்கை வாங்கிய கமலின் படத்தை ஆஸ்கார் படத்திற்கு நிராகப் பெருமை படுத்தி பேசியதால் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது பேர்ட்மேன் ஒரு ஹாலிவுட் படத்தை எல்லாரும் கொண்டாடினாங்க, அதுக்கு எந்த விதத்திலும் குறையாத படம் உத்தம வில்லன் என்று பேட்டியளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கதை, திரைக்கதை கமல்ஹாசனை எழுதிட, அவரது நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயற்றினார். என்னதான் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் திறன்பட நடித்தாலும் ரசிகர்களின் மனதில் இந்த படம் இடம் பிடிக்க தவறிவிட்டது. இதனால் கமல்ஹாசனின் தோல்வி படங்களின் லிஸ்டில் உத்தம வில்லன் முக்கிய இடத்தை பிடித்தது.

ஆனால் இயக்குநர் ராமுக்கு இயக்குநராக மிகவும் பிடித்த படம் உத்தம வில்லன் என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கும் இந்த படங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அந்த அளவிற்கு தரமான படம் என்று கூறினார். இயக்குநர் ராம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். .

அதேவேளை நராம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததால் கமலஹாசனை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் அந்த படத்தின் கதையை ஜீவாவிடம் சொன்னதும் அவர் அதில் நடிக்க ஒத்துக் கொண்டார். என்னதான் உலக நாயகனின் ரசிகனாக இருந்தாலும் மொக்க படத்தை ஆஸ்கார் படத்துடன் ஒப்பிடுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று நெட்டிசன்கள் விளாசி தள்ளி வருகின்றனர்.

Advertisement

Advertisement