சாகர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் தெலுங்கு இயக்குநர் வித்யா சாகர் இன்று காலமானார்.
அத்தோடு தனது 70 வயதில், நீண்டகால நோயுடன் போராடி வந்த அவர் தனது வயது முறிவு மற்றும் உடல்குறைவால் காலமானார் என்று சொல்லப்படுகின்றது.
அவர், பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தான் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் தற்போது, திரையுலகினர் பலரும் சோசியல் மீடியாவில் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1983-ல் நரேஷ் மற்றும் விஜயசாந்தி நடித்த ராகாசி லோயா படத்தின் மூலம் சாகர் இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன் பின்னர், அவர் தெலுங்கில் பப்ளிக் ரவுடி, தாடி, நட்சத்திர போராட்டம், அம்மா டோங்கா, பரதசிம்மம், அம்மாநாகோடலா, ஆலுமகளு, ஜகதேகவீருடு, ராமசக்கனோடு, ஒசி நா மரதாலா, அன்வேஷனா, போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியுள்ளார்.
Listen News!