• Nov 19 2024

பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்பட இசையமைப்பாளர்களான, தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகியோர் 'ராஜ்-கோடி' என்ற பெயரில் இசை ஆர்வலர்களுக்கு அறிமுகமானவர்கள். 90களில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்களில் இசையமைப்பாளர்கள் ராஜ் சில மணிநேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக, அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

68 வயதாகும், இசையமைப்பாளர் ராஜ், குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவரின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த ராஜ்ஜை பரிசோதித்த மருத்துவர்கள்,  குளியலறையில் விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்ததாக, இசையமைப்பாளரின் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ராஜ் ஹைதராபாத் குகட் பாலியில் உள்ள ஃபோரம் மால் அருகே வசித்து வருகிறார். இவருக்கு தீப்தி, திவ்யா, ஸ்வேதா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது பெண் திவ்யா திரையுலகில் இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். மற்ற இரண்டு மகள்களும் மலேசியாவில் வசிக்கின்றனர். தந்தையின் மரணம் குறித்து அறிந்து, அவர்கள் இருவரும் இந்தியா வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜின் இறுதிச் சடங்குகள் நாளை மஹாபிரஸ்தானத்தில் நடைபெற உள்ளதாம். இசையமைப்பாளர் ராஜ் மரண செய்தி திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பலர் தங்களின் இரங்கல்களையும், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.

ராஜ்-கோடி ஜோடியின் இசையில் இதுவரை 180க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளன. இருவரும் 3000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம், மற்றும் சித்ரா இருவரும் சுமார் 2500 பாடல்கள் பாடியுள்ளனர். ராஜ் ஏ.ஆர்.ரகுமானுடன் எட்டு ஆண்டுகள் கீபோர்டு புரோகிராமராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2012 முதல், ராஜ்-கோட்டி பிராண்ட் மீண்டும் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. 1994 ஆம் ஆண்டு 'ஹலோ பிரதர்' படத்திற்காக ராஜ்  சிறந்த இசை அமைப்பாளருக்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement