• Sep 21 2024

அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்- காரணம் என்ன தெரியுமா?- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகைச் சேரந்த பிரபலங்கள் பலர் சமீபகாலமாக இறப்புக்குள்ளாகி வருகின்றனர். இது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அவ்வாறு தான் தற்பொழுது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இறந்த செய்தி அனைவரையும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.

அதாவது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான முகவரி, வாலி, சிட்டிசன், வில்லன், வரலாறு போன்ற படங்களைத் தயாரித்தவர் தான் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவத்தி. இவர் அஜித்துடன் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.


ஆனால், திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.இவர் கடந்த 8 மாதங்களாக கேன்சர் நோய் காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.


இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்ரவத்தி மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement