ஆங்கிலத் திரையுலகில் ராப் பாடல்களைப் பாடி வரும் இசைக்கலைஞர்களில் ஒருவர் தான் பிக் போக்கி.ஹூஸ்டனை சேர்ந்த இவர் கடந்த சனிக்கிழமை இரவு, பியூமண்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். 45 வயதான அவர் மேடையில் விழுவதற்கு முன்பு, ராப் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவர் கீழே விழுந்த உடனேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
பிக் போக்கியின் உண்மையான பெயர் மில்டன் பவல், மேலும் அவர் ஸ்க்ரூ அப் கிளிக் குழுவுடன் இணைந்து ஹூஸ்டன் ராப் ஷோவின் அடிப்படை உறுப்பினராக இருந்தார். 1999 ஆம் ஆண்டு தனது முதல் தனி ஆல்பமான The Hardest Pit in the Litter’ வெளியானதை தொடர்ந்து அவர் பிரபலமானார்.
பிக் போக்கி ஆல்பங்களை வெளியிட்டார். அவரது மிக சமீபத்திய ஆல்பம், Sensei,' 2021 இல் வெளியிடப்பட்டது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!