மலையாள சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரெஞ்சுஷா மேனன்.இதனை அடுத்து ஸ்திரீ', 'நிழலாட்டம்', 'மகளுடே அம்மா', 'பாலாமணி ஆகிய பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன காரெக்டரில் நடித்து வந்தார்.
'மேரிக்குண்டொரு குஞ்சாடு', 'பம்பாய் மார்ச்', 'கார்யஸ்தான்', 'ஒரு வழி டிக்கெட்', 'அத்புத த்வீபு' போன்ற படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சீரியல், சினிமா என இரண்டு பக்கங்களிலும் அதிகமான ஆஃபர்கள் கிடைத்ததால், எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார்.அவரது கணவர் மனோஜ் அவர்களும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். 35 வயதே ஆன இளம் நடிகை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக தான் ரெஞ்சுஷா மேனன் உயிரை மய்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரெஞ்சுஷா மேனன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், சக நடிகையான அனில் ஸ்ரீதேவியுடன் ரீல்ஸ் செய்துள்ளார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்ட சில மணி நேரங்களிலேயே ரெஞ்சுஷா மேனன் இறந்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ரெஞ்சுஷா மேனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!