• Nov 19 2024

55 வயதிலும் பல பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய பிரபல பாடகர்-இந்த தண்டனை இவருக்கு போதாது

stella / 2 years ago

Advertisement

Listen News!

இசை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமெரிக்க பாடகர் கெல்லி. 55 வயதாகும் இவர் தன்னிடம் பயிந்சிக்கு வரும் குழந்தைகள் உள்ளிட்ட இளம் ரசிகர்கள் மற்றும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

மேலும் ஏராளமானோர் 2008ம் ஆண்டிலிருந்து இவர் மீது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் தற்போது அதிகமானவர்கள் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கெல்லி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 100000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்ததுடன், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் தீர்ப்பிற்காக கெல்லி கோர்ட்டிற்கு வந்த போது, கோர்ட் வாசலில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

அப்போது எந்த சலனமும் இல்லாமல், கைகளை கட்டிக் கொண்டு, தலையை குனிந்தபடி நின்றிருந்த கெல்லி தீர்ப்பு வாசிக்கப்பட்ட போதும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார். ஆனால் கோர்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், சிறு வயதில் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளின் போது தாங்கள் விபரம் புரியாமல், சூழ்நிலையை எப்படி கையாள்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

இந்த 30 வருட சிறை தண்டனை நீதித்துறை மீதான தங்களின் நம்பிக்கையை அதிகரிக்க வைத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் கேட்டால் இது போதாது. இது குறைவான தண்டனை என்றே சொல்கிறார்கள். இந்த தீர்ப்பால் கெல்லி மிகுந்த மன வேதனையில் இருப்பதாக கெல்லியின் வழக்கறிஞர் ஜெனிஃபர் போன்ஜியன் கூறி உள்ளார்.

அவரும் சாதாரண மனிதர் தான். மற்றவர்களை போல் அவருக்கும் உணர்வு உண்டு. கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று தான் அவர் அமைதியாக உள்ளார். அமைதியாக இருப்பதால் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கிடையாது என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement