• Sep 22 2024

பாலிவுட் நடிகை கியாரா அத்வானியுடன் ஜோடி சேரப்போகும் பிரபல தமிழ் நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன். இவரை மிகவும் உயர்த்தி வைத்த படம் என்றால், அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றே சொல்லலாம்.

மான்கராத்தே,எதிர்நீச்சல் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார் நம்ம சிவகார்த்திகேயன்.அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் டானும் ஹிட் கொடுத்துள்ளது.

அந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாகி வசூலித்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் தற்போது SK20 படத்தில் அனுதீப் இயக்கத்தில் சிவா நடித்து வருகிறார். மேலும் அதில் வெளிநாட்டு நடிகை அவருக்கு ஜோடி ஆகிறார். SK21 படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் மண்டேலா புகழ் இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி சேர இருக்கிறாரென தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் 22வது படமான இதை SK22 என குறிப்பிட்டு வருகின்றனர். எனினும் இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என தகவல் வந்திருக்கிறது.

கியாரா அத்வானி தெலுங்கில் நடித்து இருந்தாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement