நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இதனை பார்வையாளர்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தீப் கிஷன் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இந்த நிலையில் இவர் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளதால் இப்படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்று நம்பப்படுகின்றது. மேலும் இப்படத்தினை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வாசம் எழுத, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
நாகூரின் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்யவுள்ளார். கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!