பிரபல டிவி நடிகையாக வலம் வருபவர் தான் அம்ரீனா பட். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதோடு ஹஷ்ரூ பகுதியில் வசித்து வந்தார். 35 வயதான அம்ரீனா மற்றும் அவரின் சகோதரரின் 10 வயது மகனை அவர்களின் வீட்டிற்கு வெளியே வைத்து 3 பேர் சுட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படுகாயம் அடைந்த அம்ரீனா, அவரின் உறவுக்கார பையனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அம்ரீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சிறுவனின் உயிருக்கு பாதிப்பு இல்லை. அம்ரீனாவை சுட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 3 பேரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அம்ரீன் பட் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த தாக்குதலில் அம்ரீன் பட் உயிரிழந்தார். அவரின் உறவினர் காயம் அடைந்தார்.
அப்பாவி பெண்கள், குழந்தைகளை தாக்குவதை ஏற்க முடியாது.அவரின் 10 வயது உறவினர் காயம் அடைந்திருக்கிறார். நேற்று நடந்த தாக்குதலில் போலீஸ் கான்டபிளின் மகள் காயம், அடைந்துள்ளார். இதனால் இந்த தாக்குதல்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் டான் பட மாஸ் வசூல் வேட்டை-வெளியானது முழு விபரம்..!
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!