• Sep 20 2024

விருமன் திரைப்பட உரிமையைக் கைப்பற்றியுள்ள பிரபல தொலைக்காட்சி- அடடே இந்த டிவியை எல்லோருக்கும் பிடிக்குமே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் விருமன்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலான படம் குறித்த விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய்டிவி கைப்பற்றியுள்ளதோடு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசன் ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement