• Sep 20 2024

கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்; எச்சரித்த ப்ளூ சட்டை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

“ஆன்டி இந்தியன்” என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவோ அல்லது அறிமுக ஹீரோவாகவோ யாராக இருந்தாலும் சரி பாராபட்சம் பார்க்காமல் அனைவரையும் விமர்சிப்பார்.

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் படம் எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து அதிரடியாக சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.

அதிலும் குறிப்பாக அஜித் மற்றும் ரஜினி படங்களை கூடுதலாகவே டேமேஜ் செய்து வருகிறார். இதனால் அவர்களின் ரசிகர்களிடம் தான் அதிகம் வாங்கி கட்டுகிறார் ப்ளூ சட்டை மாறன். ரஜினி மற்றும் அஜித்தின் படங்களையும் படங்களின் வசூலையும் விமர்சித்து டிவிட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும் அந்த வகையில் அஜித் ரசிகர் ஒருவர், பொதுவெளியில் அடி வாங்கிய பிறகுதான் விமர்சனம் செய்வதை நிறுத்துவீர்கள் போல என கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தார்.

மேலும் அந்த டிவிட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை, காணமல் போயி விடாதே என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, 'அடிக்கறவன் ஜெயில்ல கம்பி எண்ணுவான். நீ வேணும்னா உன் சொந்தக்காசுல அவனுக்கு டீ வாங்கி குடு. துப்பு இருந்தா ஜாமீன்ல எடு. நீயும் உன் AK மாதிரி தன்னம்பிகையோட உழைச்சி உருப்பட பாரு. Fake id வச்சிக்கிட்டு.. கமன்ட் போட்டு அடையாளம் இல்லாம காணாம போயிடாத' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement