• Sep 20 2024

சல்மான் கான் கையில் உள்ள கடிகாரத்தின் விலை... இத்தனை இலட்சமா..? வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சல்மான் கான். இவர் 50 வயதை கடந்து விட்ட போதிலும் தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார். இந்தி சூப்பர் ஸ்டாரான இவர் படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிசியாக இருந்து வருகின்றார்.


இவர் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் அதிக சொத்துகளுடன் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகின்றார். அதாவது ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம், லாபத்தில் பங்கு எனப் பல வழிகளில் இவருக்கு வருமானம் வந்து குவிக்கின்றது. 


இந்நிலையில் சமீபகாலமாக வித்தியாசமான ஆடம்பர கைக்கடிகாரம் அணிந்தபடி சல்மான் கானை பல இடங்களில் பார்க்க முடிகின்றது. அதுமட்டுமல்லாது இவர் மற்றோர் கையில் பிரேஸ்லெட்டும் அணிந்து இருக்கிறார். இதில் பிரேஸ்லெட் அவரது தந்தை சலீம்கானால் பரிசாக வழங்கப்பட்டதாகவும், கைக்கடிகாரம் அவருக்கு மிகவும் ஸ்பெஷலானது எனவும் பலரும் கூறி வருகின்றனர். 


இந்நிலையில் இவர் அணிந்துள்ள அந்தக் கடிகாரத்தின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் அவர் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ.46 லட்சம் எனவும், இதில் தங்கம், வைரம் பதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement