• Sep 20 2024

தன்னை ஏமாற்றிய பிரபலத்திற்கு தக்க சமயத்தில் உதவி செய்த விக்ரம்- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் விக்ரம். ஆனால் இவர் சமீபகாலமாக நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் முக்கியமானவை தான் பிதாமகன் மற்றும் சேது. இப்படத்தினை தயாரித்திருந்தவர் தான் வி.ஏ.துரை. 


பிதாமகன் ரிலீஸ் நேரத்தில் அவர் விக்ரமுக்கு 25 லட்சம் ருபாய் சம்பளம் தராமல் ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்து அந்த பஞ்சாயத்து நீண்ட காலம் நடந்தது.இந்நிலையில் தற்போது வி.ஏ.துரை சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் இருந்து வந்தார். அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்தனர்.


தற்போது சக்கரை நோயால் அவரது ஓரு கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது செயற்கை கால் பொருத்த பணம் இல்லாமல் அவர் இருந்திருக்கிறார்.அது பற்றி அறிந்து விக்ரம் தான் அவருக்கு உதவி செய்திருக்கிறார். பகையை மறந்து விக்ரம் செய்த உதவியை பார்த்து வி.ஏ.துரை கண்கலங்கி நன்றி கூறினாராம். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement