தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் 'ஜோக்கர்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். போட்டோ ஷூட் நடத்துவதில் அலாதி பிரியம் கொண்ட ரம்யா பாண்டியன் தனது புடவை போட்டோ ஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்.
இதன் மூலம் கிடைத்த வரவேற்பால் விஜய் டீவியின் 'குக் வித் கோமாளி' சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ஃபைனல்ஸ் வரை வந்தார். அதனைத் தொடர்ந்து 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி இருந்தார். பின்னர் 'பிக்பாஸ்' சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. அதைத் தொடர்ந்து 'பிபி அல்டிமேட்டில்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாது “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் ஆனது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயக்குகிறார். மேலும் தேனீஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து வந்தாலும் ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது கறுப்பு நிற சேலையில் புகைப்படங்களை வெளியிட்ட இவர் அதற்கு கீழே "என்ன சொல்ல ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள.." எனப் பதிவிட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்து குழம்பியுள்ள ரசிகர்கள் "காதலில் விழுந்து விட்டீர்களா?" எனத் தமது கேள்விகளை கமெண்டுகளின் மூலமாக கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது அப்புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.
Listen News!