தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், கடந்த ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதன் பிறகு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால், லைகா புரொடக்ஷன்ஸ் ak62இயக்குநரை மாற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்தவகையில் ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று பலரும் உறுதியாக கூறி வருகிறார்கள்.
மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், அஜித் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் AK62 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் தற்போது ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி சேர இருப்பது உறுதியாகும். அதுமட்டுமல்லாது படத்தில் யாரெல்லாம் பணியாற்ற இருக்கிறார்கள் என்பதை அறியவும் தல ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்திருக்கின்றது. அத்தகவலின் படி AK62 அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை தான் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றே இது தொடர்பான அறிவிப்பு வரும் என கூறப்பட்ட நிலையில், படம் குறித்த அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Listen News!