• Sep 20 2024

தியேட்டர்களில் நாளை வெளியாகவுள்ள 8படங்கள்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எப்போதுமே ரசிகர்கள் புதிய புதிய படங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு வாரமும், திரையரங்குகளில் 4 படங்களுக்கு அதிகமாகாமல் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மட்டும், திரையரங்கில் மொத்தம் 8 படங்கள் வெளியாக உள்ளன. 

அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

தலைநகரம் 2

அந்தவகையில் சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி ஹீரோவாக நடித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'தலைநகரம்'.  இந்த படத்தின் உடைய இரண்டாம் பாகத்தை இயக்குநர் துரை இயக்கி உள்ளார். இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி-யே ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


வேட்டையாடு விளையாடு:

கமலஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார். கமாலினி முகர்ஜி, ஜோதிகா, ஆகியோர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், பிரகாஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வெளியாகி சுமார் 18 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படம், டிஜிட்டல் வெர்ஷனின் மீண்டும் ரீ ரிலீசாகி இருக்கின்றது.

அழகிய கண்ணே

திண்டுக்கல் லியோனியின் மகன் சிவகுமார் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நாயகன் - நாயகியாக நடித்து, வெளியாக உள்ள திரைப்படம் 'அழகிய கண்ணே'. இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ளார். 

நாயாடி

கேரளாவில் வாழ்ந்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் கதையை மையமாக கொண்டு இப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுனராக பணிபுரிந்த வருமான ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் இயக்கி, தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக துணிவு படத்தில் நடித்திருந்த காதம்பரி நாயகியாக நடித்துள்ளார்

பாயும் ஒளி நீ எனக்கு 

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்திற்கு சாகர் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவில், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ரெஜினா

நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரெஜினா'. திரில்லர் பாணியில் உருவாகி உள்ள 'ரெஜினா' படத்தை சதீஷ் நாயர் இயக்கியுள்ளார். 


தண்டட்டி

ராம் சங்கையா இயக்கத்தில், காமெடி கதை களத்தை முதன்மையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தண்டட்டி'.  நடிகர் பசுபதி மற்றும் ரோகிணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அஸ்வின்ஸ்

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில், தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அஸ்வின்ஸ். திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில், விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement