தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். ஆனால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த பாவனா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
அந்தவகையில் தற்போது முதன் முறையாக நடிகர் ரகுமானுடன் இணைந்து பாவனா புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இருப்பினும் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது.
இப்படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கின்றார். அத்தோடு பாவனா தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்குகின்றார். அதிரடி திரில்லர் படமாக உருவாகும் இப்படமானது தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!