• Nov 19 2024

அவதார்-2 ரிலீஸில் புது சிக்கல்-சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் தான் அவதார். எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியட்டர்களில் 3டி வெர்சனில் வெளியிடப்பட்டது.

237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் அவதார். ரீலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது.இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்சன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை பெற்றது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். மேலும் இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். எனினும் அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.

இந்தியாவில் அதிக வசூலை அள்ளிய அவதார், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் "அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்" திரைப்படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ளது.

எனினும் சமீபத்தில் அவதார்-2 படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தனர் என்றும், இதற்கு கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டிலும் இப்போது இதே பிரச்சனை கிளம்பியுள்ளது, அவதார் 2 படத்தினை டப்பிங் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் திரையரங்குகளிடம் அதிக ஷேர் கேட்பதால் பிரச்சனை எழுந்துள்ளது.அத்தோடு கடைசி நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வந்திருப்பது ரசிகர்களுக்கு தான் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் சொன்ன தேதியில் படம் வருமா? 

Advertisement

Advertisement