• Nov 14 2024

அச்சு அசல் சிபிராஜ் போலவே இருக்கும் அவரின் இளைய மகன்... புகைப்படத்தைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் ஹீரோவாக பல படங்களில் தொடர்ந்து நடித்த வண்ணமே இருக்கின்றார். அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.


இவ்வாறாக படங்களில் பிசியாக நடித்து வரும் சிபிராஜின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் 10 வருடங்களாக காதலித்து வந்த ரேவதி என்ற பெண்ணை 2008-இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.


இந்நிலையில் நடிகர் சிபிராஜ் சமீபத்தில் தனது குடும்பத்துடன் குன்னூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிபிராஜின் இரு மகன்களையும் பார்த்த ரசிகர்கள், சிபிராஜின் மகன்கள் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாது அவரின் 2ஆவது மகன் அச்சு அசலாக சிபிராஜ் போலவே இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement