தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பல காலமாகத் திகழ்ந்து வருகின்ற ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். அன்று தொடக்கம் இன்றுவரை சினிமாத் துறையிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.
இவ்வாறாக மூத்த நடிகராக இருக்கின்ற விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் என விஜயகுமாருக்கு மொத்தமாக 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த 5 மகள்களிலும் வனிதாவுடன் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக குடும்பத்தினர் யாருமே அவருடன் கதைப்பதில்லை. இவர் தவிர்ந்த ஏனைய நான்கு மகள்களும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலையில் இருக்கின்றதாம். விஜயகுமார் சமீபத்தில் அந்த வீட்டை மீண்டும் புதுப்பித்துள்ளார். 10பெட்ரூம்கள் கொண்ட இந்த வீடு அனைவரும் தங்கக்கூடிய வகையில் மிகவும் அழகாக அமைந்துள்ளது.
அத்தோடு வீட்டின் முகப்பில் விஜயகுமார் மற்றும் முதல் மனைவி முத்துக்கண்ணு மற்றும் இரண்டாவது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் தாய், தந்தை ஆகியோருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
Listen News!