• Sep 20 2024

முதன் முதலாக பிரபல யூடியூபர் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் நயன்தாரா- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருகான் ஜோடியாக ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இதில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . தனி ஒருவன் படத்துக்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.


இதுதவிர நயன்தாரா நடிக்கும் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகின்றார்.இதில் கதாநாயகனாக நடிக்க ஜெய் கமிட்டாகியுள்ளார். மேலும் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படமொன்றிலும் நாயகியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்.


இப்படி வரிசையாக படங்களில் கமிட் ஆகி வரும் நயன்தாரா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். இப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இத்திரைப்படத்தை பிரபல யூடியூபரான டியூடு விக்கி தான் இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். நடிகை நயன்தாரா யூடியூபர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement