• Nov 14 2024

பீட்டர் பாலைத் தொடர்ந்து... மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட வனிதா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்வும் முடிவுக்கு வந்தது.


இதனை அடுத்து பல சர்ச்சைகளைச் சந்தித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டதன் மூலமே மக்களிடம் மிகவும் பிரபல்யமானார். இதன் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்து இப்போது கலக்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் சிறப்பு வேடம், படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களும் செய்து வருகிறார்.


மேலும் வனிதா ஏற்கெனவே 2திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. இருப்பினும் அவரையும் திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து செய்து விரட்டி விட்டமை நம் அனைவருக்கும் தெரியும்.


இந்நிலையில் தற்போது வனிதா மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா. இதனைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அதற்கு வனிதா விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளதாக வனிதா கூறியுள்ளார்.

அத்தோடு இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும் எனவும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை எனவும் அப்பேட்டியில் கூறி இருக்கிறார் வனிதா. 

Advertisement

Advertisement