• Sep 20 2024

'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா டிக்கட்டின் விலை இவ்வளவா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.


அந்த வகையில் டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள், 'வாரிசு' படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகை ரஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகள் தற்போது விறு விறுப்பாக விற்று தீர்ந்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் எப்படியாவது டிக்கெட்டை வாங்க வேண்டும் என போட்டி போட்டு வருகின்றனர். 


அந்த வகையில், ஒரு டிக்கெட்டின் உடைய விலை சுமார் 4000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனை அறிந்த ஒரு சில ரசிகர்கள் படத்தின் டிக்கெட் கூட இவ்வளவு விலை இருக்காது? எனக் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement