• Nov 17 2024

பிரபல நடிகரின் காதல் பரிசு பிளாஸ்டிக் தோடா? ஏக்கத்தில் ரசிகர்கள்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிறந்து விளங்கும் நடிகர் ஷாருக்கான் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். 

இவர் கடந்த 1991ம் ஆண்டு கௌரி என்பவரை 6 வருடங்களாக காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆர்யன், சுஹானா, ஆப்ராம் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 


ஆர்யன் கான் இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுஹானா நடிகையாகிவிட்டார். ஆப்ராம் கான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்.


ஷாருக்கான் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்துகிறார். 


கௌரிக்கு கொடுத்த முதல் காதலர் தின பரிசு எதுவென்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு ஷாருக்கான் "பிங்க் நிற பிளாஸ்டிக் தோடு" தான் கொடுத்தேன். 34 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பரிசை கொடுத்தேன் என்றார். 


ஆரம்பத்தில் ஷாருக்கான் பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் கௌரி தான் பக்க துணையாக இருந்திருக்கிறார். ஷாருக்கானுடன் ஷூட்டிங்ஸ்பாட்டில் மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறார். 


இப்போதெல்லாம் ஷாருக்கான் விலை உயர்ந்த பரிசுகளை கௌரிக்கு கொடுத்தாலும் அந்த பிளாஸ்டிக் தோடு கௌரி பத்திரமாக வைத்திருப்பார் என்று ரசிகர்கள் கூறினார்கள்.


Advertisement

Advertisement