• Sep 20 2024

பிரபல ராப் பாடகரின் டிவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல அமெரிக்க ராப் இசை பாடகர்களில் ஒருவராக வலம் வருபவர் கன்யே வெஸ்ட். ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

இவரின் டிவிட்டர் கணக்கானது தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதாவது சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் தான் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். 


மேலும் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது எனவும் இதனால் தான் முடக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement