• Nov 10 2024

இயக்குநர் லிங்குசாமிக்கு விதித்த சிறை தண்டனை-காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் லிங்குசாமி.

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். 

திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.



இவ்வாறுஇருக்கையில் இவர்கள் இயக்கத்தில் சமீபத்தில் தான் தி வாரியர் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் ராம் நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்நிலையில் பிவிபி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.    

Advertisement

Advertisement