• Sep 20 2024

இசை ஆல்பத்தில் என்றி கொடுக்கும் நடிகர் பிரபு தேவா-பட்ஜெட்டை கேட்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடனம் மட்டும் அன்றி நடிப்பு இயக்கம் என பல திறமை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகின்றார்,

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா, இயக்குநர் ராகவன் இயக்கத்தில் மை டியர் பூதம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில்,சமீப காலமாக திரை உலக பிரபலங்கள் தனியிசை ஆல்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது.

இந்த ஆல்பம் பிரமாண்டமாக 1 1/2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்தப் பாடலை இயக்கி,பிரபுதேவா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement