• Sep 20 2024

அழகில் ஜொலிக்கும் அருண்விஜய் மகன்... அடுத்த ஹீரோ ரெடி போல... கமெண்டுகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய தனித்துவமான திறமையினால் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னேறி இருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பல குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகின்ற நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார்.


இவர்களின் குடும்பத்தில் 3 தலைமுறையினர் சினிமாவில் கால் பதித்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். அதாவது நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வையும் தமிழ் சினிமாவில் நடிப்பில் களமிறக்கி இருக்கின்றார்.



நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர்கள் தான். இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பமாக இருக்கும் நிலையில் மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் திரையுலகில் அசத்தி வந்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது அருண் விஜய்யின் மகன் சினிமாவில் கலமிறங்கியுள்ளார்.



இவ்வாறாக ஒட்டு மொத்த குடும்பமும் கலையம்சத்தோடு ஒன்றிப்பாகி வருகின்றனர். அருண் விஜய்யை பொறுத்தவரையில் இவர் நடிப்பில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அதில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவேற்றி வருவார்.



அந்தவகையில் தற்போதும் தனது மகனுடன் தானும், தனது தந்தையான விஜயகுமாரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கின்றார். இதில் அருண் விஜய்யின் மகன் சற்று வளர்ந்து காணப்படுவதோடு அழகில் தகப்பனையும் மிஞ்சுமளவிற்கு ஜொலிக்கின்றார்.



இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோ ரெடி" என தமது பாணியில் கமெண்டுகளை பதிவு செய்து வருவதோடு லைக்ஸ்களை அள்ளிக் குவித்தும் வருகின்றார்கள். 

Advertisement

Advertisement