• Nov 10 2024

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ள சமந்தா... என்னதான் பிரச்சினை... கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் 10 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இன்றும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களில் நடித்து அங்கும் ஏராளமான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். 


நடிப்பில் உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களையும் சந்தித்த வண்ணம் இருக்கின்றார் நடிகை சமந்தா. அதாவது திருமணம், நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து முடிவு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காத வகையில் சிறப்பாகவும், துடினமாகவும் செயல்பட்டு தன்னுடைய சினிமாப் பயணத்தை தொடர்ந்து வருகின்றார். 


அந்தவகையில் சமீபத்தில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படமானது இவருக்கு சிறப்பான பல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா என்ற கதாபாத்திரம் இவரை ரசிகர்களிடையே மேலும் மேலும் பேவரைட் ஹீரோயினாக மாற்றியுள்ளது. மேலும் தற்போது இவரின் நடிப்பில் 'யசோதா, குஷி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.


படங்களைப் போலவே சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தவர் சமந்தா. ஆனால் சமீபகாலங்களாக இவரது எந்த ஒரு போட்டோஷுட்டோ வீடியோவோ வெளியாகவில்லை. இருப்பினும் இடையில் யசோதா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். 


இந்நிலையில் தற்போது சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகாமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் தொடர்ந்து அவர் புகைப்படங்களை எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னதாக இவர் நடிக்க வந்த புதிதிலும் இதேபோன்ற பிரச்சினைகளை சந்தித்திருந்தார். எனினும் அப்போது அது சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதே பிரச்சினையில் சிக்கியுள்ளார் சமந்தா. இதையடுத்து விரைவில் இது குறித்த சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சமந்தா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement