நாளை திரைக்கு வரவிருக்கும் லியோ பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது. லியோ தயாரிப்பாளர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர் இடையில் கடும் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. ஏராளமான தியேட்டர்களில் லியோ ரிலீஸ் ஆகா உள்ள நிலையில் ,டிக்கட் வாங்குவதே ரசிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
லியோ திரைப்படத்துக்கான டிக்கட்டுகள் விற்பனை ஆரம்பிப்பதை கேள்விபட்டு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் திரையரங்கு டிக்கட் விற்பனை நிலையத்தில் ஒன்லைன் டிக்கட்டுகள் ஆரம்பமாகி 1 நிமிடத்தில் அனைத்து டிக்கட்டுகளும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டனர்.
இதன் காரணமாக போலீசார்களை வரவழைத்து ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒன்லைன் டிக்கட் புக்கிங் மட்டுமே ஓபன் செய்யப்பட்டிருந்தது. அதுவும் தற்போது முடிந்து விட்டது என கூற விஜய் ரசிகர்கள் எதிர்த்து வாதிட்டு கொண்டிருக்கின்றனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு இணங்க இந்த பிரச்சனை தீருமா என்பது தெரியவில்லை.
Listen News!