ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர்.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இந்நிலையில் ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டாருடன் நான்காவது முறையாக இணைந்த படம் தான் பாபா.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமனி, விஜயகுமார், ஷாயாஜி ஷிண்டே, ரீனா பரத்வாஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மேலும் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்தது.
இதன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது.
ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர் முன் கூடி பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடியும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Listen News!