• Sep 21 2024

ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு எரித்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பார்த்திபன் இயக்கி அவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இரவின் நிழல்.முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கார் விருது விழாவிலும் திரையிடப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பாக ஓடி வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.இந்நிலையில் ஒவ்வொரு புதிய படத்தின்போதும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று நினைத்திருந்ததாகவும் ஆனால் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இதற்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இரவின் நிழல் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இவரது இந்த கமெண்ட் பரவலாக அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அவர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ரசிகர்கள் ஒருபடி மேலே போய் அவரது உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ப்ரோவிடண்ட் மால் திரையரங்கில் படம் பார்த்த புதுச்சேரி நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் திரையரங்க வாயிலில் படம் குறித்து மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் கண்டனத்தை பதிவு செய்தனர்.தொடர்ந்து அவரது உருவ பொம்மைக்கு தீயிட்டு எதிர்த்தும் காலால் உதைத்தும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement