தமிழ் சினிமாவில் ரொம்பவே மவுசு நிறைந்த ஆள் நம்ம லோகேஷ் கனகராஜ் தான். இவர் தமிழ் திரையுலகில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். மேலும் இவரால் இயக்கப்பட்ட மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய அனைத்து திரைப்படங்களும் செம்ம ஹிட் ஆகிற்று.
தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுப்பதால் இவருக்கு சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதன்படி தற்போது லியோ படத்திற்காக அவர் ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் கூறி இருந்தார்.
அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு அவர் தயாரிக்க உள்ள முதல் படத்தை ஆடை, மேயாத மான் போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் தான் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அப்படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.
தமிழ் சினிமாவில் அதிக மவுசு உள்ள இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், இவர் இப்படி திடீரென தயாரிப்பில் இறங்க உள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
தயாரிப்பில் ஏதேனும் சிக்கல் வந்தால் அது இயக்குநர் லோகேஷையும் பாதிக்கும் என்பதால் படம் இயக்குவதில் மட்டும் லோகேஷ் கவனம் செலுத்தினால் அவர் இன்னும் பிரபலமாவார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
Listen News!