• Nov 10 2024

25வது பிறந்தநாளை தனிமையில் கொண்டாடிய சாயிஷா- ஆர்யா எங்கே எனக் கேட்டு வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான  'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சாயிஷா.இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  கார்த்திக்கு ஜோடியாக 'கடைக்குட்டிசிங்கம்', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஜூங்கா', சூர்யாவுக்கு ஜோடியாக  'காப்பான்', என தொடர்ந்து முன்னணி நடிகர்fளுடன் இணைந்து நடித்துள்ளார்.


மேலும் இவர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே சாயிஷா நடித்தார். பின்னர் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை பிறந்த தகவலை நடிகர் விஷால் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறினார்.


சாயிஷா தற்போது தன்னுடைய குழந்தையை கவனிப்பதில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சாயிஷாவின் தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை, நேற்று கொண்டாடியுள்ளார். காஷ்மீரில் இரவு நேரத்தில்... சாயிஷா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆர்யா எங்கே போய்விட்டார். ஆர்யா இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியது கவலையாக இருக்கு என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement