• Sep 21 2024

KGF தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்புவா..குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

KGF படங்களின் வெற்றிகளுக்கு அடுத்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

நடிகர் யாஷ் நடித்த KGF மற்றும் KGF 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது..

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சுதா கொங்கரா இப்போது இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கை இயக்கி வருகின்றார்.

இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குநரோ இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது சிம்புதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

அதே போல சூர்யா – சுதா கொங்கரா இயக்கும் படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement