இந்நிகழ்ச்சியில் இவருக்கும் சக போட்டியாளரான பாவனிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அமீர் காதலை ஏற்காத பாவனி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்விகளே ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அமீர்-பாவனி ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட்நியூஸ் வெளியாகி இருக்கின்றது. அதாவது தற்போது அமீர் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமல்லாது முதன்முறையாக இவர் இயக்கும் இப்புதிய படத்தில் பாவனி நாயகியாக நடிக்கிறாராம். அத்தோடு நாயகனாக அமீரே நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்திற்கான மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ஆனது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
Listen News!