• Sep 20 2024

5 கிராமி விருது வென்ற பிரபல பாடகி மரணம்-சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற ஹாலிவுட் பாடகி நவோமி ஜட் அமெரிக்க நாட்டுப்புற பாடல்கள் மூலம் ரசிகர் மத்தியில் புகழ்பெற்றவர்.

5 முறை சிறந்த பாடகிக்கான கிராமி விருது பெற்றவர். அத்தோடு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் 76 வயதான இவர் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் அவரை பாதுகாத்து வந்தனர். தற்போது அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து நவோமியின் மகளும், பிரபல ஹாலிவுட் பாடகியுமான ஆஷ்லே ஜட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது…

நாங்கள் அழகான தாயை இழந்து விட்டோம். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவரை நாங்கள் முடிந்தவரை நன்றாக பார்த்துக் கொண்டோம். இப்போது அவரது மறைவால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளோம். அவர் எங்களை நேசித்தது போன்றே தனது ரசிகர்களையும் நேசித்தார். என்று தெரிவித்து இருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement