• Nov 11 2024

மற்றுமோர் பிரபல பாடகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

1960கள் மற்றும் 1970களில் இலங்கையில் அதிகம் தேடப்பட்ட பாடகர்களில் ஒருவராக இருப்பவர் மூத்த பாடகர் கிறிஸ்டோபர் பால். இவர் "வதுர நாள", "ரோசா மலக் டுடுவமா", "முத்து பெல்லோ" மற்றும் "கடுரோட கம்மனே" போன்ற காலத்தால் அழியாத பாடல்களினுடைய வெற்றிகளுக்காக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.


இவரின் மனைவி லிலானி குணசேகர மற்றும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டோபர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பாடகராக இருந்தார். அதுமட்டுமல்லாது அவர் வெளிப்புற மற்றும் உட்புற கச்சேரிகளில் பாடல்களை பாட இவர் அழைக்கப்பட்டார். 

அத்தோடு கச்சேரிகளுக்காக பல வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணமும் செய்துள்ளார். இவ்வாறு இசைக்கான அவரது பங்களிப்பிற்காக, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2018 இல் கொழும்பில் ‘கிறிஸ்டோ 82’ என்ற தனி இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் அவர் தனது ஒரே ஒரு தனி இசை நிகழ்ச்சியாக இருபத்தைந்து பாடல்களைப் பாடினார்.


இவ்வாறு இசை மேல் தீராத மோகம் கொண்ட இவர் பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது 87வது வயதில் இன்றைய தினம் காலமானார். இவரின் இறப்பானது ரசிகர்களை சோகத்தில் மூழ்க செய்துள்ளது. நேற்றைய தினம் பாடகர் டோனி ஹசன் மரணத்தை தொடர்ந்து இன்று காலமான இவருக்கு பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement