• Nov 17 2024

ரஜினி மகள் வாழ்க்கையை கெடுத்து விட்டு உனக்கு ‘மாஸ்’ கேட்குதா? தனுஷை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தின் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கமெண்ட் செய்திருந்த தனுஷை, ரசிகர்கள் கழுவி ஊத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தின் டைட்டில் வீடியோ நேற்று வெளியானது என்பதும் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட அந்த வீடியோ ஒரு சில நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏராளமான கமெண்ட் பதிவு செய்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் ’கூலி’ படத்தின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ’மாஸ்’ என்று தெரிவித்திருந்தார். தனுஷின் இந்த பதிவுக்கு பல ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினியின் மகள் வாழ்க்கையை கெடுத்து விட்டு உனக்கு மாஸ் கேட்கிறதா? என்று ஒருமையில் சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் மகளை தனுஷ் விவாகரத்து செய்தது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ’ரஜினி மகள் வேண்டாம், ஆனால் ரஜினியின் படத்தை மட்டும் வாழ்த்த தெரிகிறதா? என்று கமெண்ட் பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement