தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் சாம் ஆண்டன் இயக்கிய 'டார்லிங்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், செல்ஃபி' போன்ற படங்களில் அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார்.
இவ்வாறாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து திறமையான நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்தவகையில் இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'இடி முழக்கம்', விவேக் இயக்கத்தில் '13' ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது இன்னொரு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை 'நாளை, சக்கரவியூகம்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநரும், பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தவருமான உதய் மகேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அப்படத்தை டைரக்டு செய்கிறார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இதன் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
மேலும் புஷ்பா கந்தசாமி, கந்தசாமி பரதன் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தில் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோநாராயணன், மயில்சாமி, முத்துக்காளை ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
Listen News!