• Sep 20 2024

உலகளவில் NO.1 பாடல் என்ற இடத்தை பெற்ற ரஞ்சிதமே-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருவதோடு இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் பணிகள் யாவும் அண்மையில் தான் நிறைவடைந்தது.இதனையடுத்து படக்குழு போஸ்ட்  புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

 சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது யூடியூப் Music Global Charts குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் டாப் 100 மியூசிக் வீடியோஸ் Global பட்டியலில் ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்கிறது.

Advertisement

Advertisement