• Nov 14 2024

'கட்டா குஸ்தி' படத்தில் 'பத்ரி' விஜய்யை வம்பிற்கு இழுத்த விஷ்ணு விஷால்... கொந்தளித்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது 'கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார்.


விஷ்ணு விஷாலுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் தயாரித்துள்ள கட்டா குஸ்தி படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். கட்டா குஸ்தி திரைப்படத்தில் கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கட்டா குஸ்தி படத்தின் ட்ரெய்லர் ஆனது வெளியாகி ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அத்தோடு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தத் திரைப்படமானது டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இப்படத்தின் கதைக்களம் ஆனது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீரோவுக்கும் கேரளாவைச் சேர்ந்த நாயகிக்கும் நடக்கும் திருமணமும் அதன் பின்னணியையும் மையமாகக் கொண்டமைந்துள்ளது. இந்நிலையில் கட்டா குஸ்தி ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை பார்த்து விட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 


அதாவது "பத்ரி படத்துல பாக்ஸிங்கே கதின்னு கிடந்த அண்ணன விட, கடைசில வேடிக்கை பார்த்துட்டு இருந்த நம்ம தளபதி விஜய் தான் கப் அடிச்சார்" என ரெடின் கிங்ஸ்லி பேசும் வசனம் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி விஜய்யை புகழ்வது மாதிரி இருக்கா இல்லை கலாய்க்கிறார்களா என விஜய் ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

எது எவ்வாறாயினும் வாரிசு திரைப்படம் ரிலீஸாவதில் தற்போது சிக்கல் இருக்கும் நிலையில், கட்டா குஸ்தி படத்தில் இப்படி வசனம் தேவையா என விஜய் ரசிகர்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.

Advertisement

Advertisement