• Nov 17 2024

தனது கண்களை தானம் செய்த ‘96’ திரைப்பட நடிகை-பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில படங்களிலேயே தமக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை வர்சா பொல்லம்மா.

இவர் ‘96’ ‘செல்பி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். இவருடைய சொந்த ஊர், பெங்களூரு. பட்டதாரியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தற்பொழுது குறிப்பாக, தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு அதிகளவான படங்கள் குவிந்து வருவதால் அதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் சினிமாவில் மட்டுமல்லாமல் பொதுச்சேவைகளிலும் வர்சாவுக்கு ஆர்வம் இருக்கிறது. அதற்கு அடையாளமாக, இவர் தனது கண்களை தானம் செய்து இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement