• Sep 20 2024

அமிதாப் பக்சனை அடுத்து கமலுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இவர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கமலுக்கு கோவில் கட்டுவதாக கூறி இருக்கின்றனர் கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள். ஏற்கனவே அங்கு அமிதாப் பச்சனுக்கும் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் தற்போது கமலுக்கு கோவில் காட்டும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் அந்த கோவிலை திறக்க கமல்ஹாசனையே அவர்கள் அழைத்திருக்கிறார்கள் என செய்தி வெளியாகி இருக்கிறது.

கமல் தனது கோவிலை திறக்க கொல்கத்தாவுக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement